AR Rahman : "என் எல்லா கச்சேரிக்கும் இந்த கிளி வேணும்.."... மல்லிப்பூ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கிளி.. ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தினை தமிழகம் முழுவதும்  உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது.

AR Rahman : "என் எல்லா கச்சேரிக்கும் இந்த கிளி வேணும்.."... மல்லிப்பூ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய கிளி.. ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் பதிவு..!

வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் (சிம்பு) வாழ்க்கை சம்பவங்களே "வெந்து தணிந்தது காடு" படமாகும். வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் & தாமரை ஆகிய நால்வர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இன்னும் பெற்று வருகிறது. பாடகி மதுஶ்ரீ பாடிய இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் தாமரை வரிகளில் வெளியான இந்த மல்லிப்பூ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததை அடுத்து, இந்த படத்தில் தனக்கும் மிகவும் விருப்பமான பாடல் இதுதான் என்றும் சிம்புவும் கூறியிருந்தார். இன்ஸ்டாகிராமிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் ரீல்ஸ் செய்யப்பட்ட இந்த பாடல் இன்னும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இந்நிலையில் இந்தப் பாடலுக்கு கிளி ஒன்று நடனம் ஆடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டு இனி தன்னுடைய எல்லா கச்சேரிகளுக்கும் இந்த கிளி வேண்டும், இந்த கிளியில் அந்த நடனமும் வேண்டும் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.

AR RAHMAN

மற்ற செய்திகள்