இங்க 'ஃபுல்லா' இசையால நிரம்பி கெடக்கு... கொரோனா வார்டில் ஒலிக்கும் 'ராஜா', 'ரஹ்மான்' மெலோடிஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் இந்த கொடிய தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இங்க 'ஃபுல்லா' இசையால நிரம்பி கெடக்கு... கொரோனா வார்டில் ஒலிக்கும் 'ராஜா', 'ரஹ்மான்' மெலோடிஸ்!

அதே போல, கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் தங்களுக்குள் ஏற்படும் பயத்தால் தவறான முடிவுகளையும் எடுத்து துயரமான முடிவுகளை தேடிக் கொள்கின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளை மனதளவில் தைரியமாக வைக்க வேண்டி செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவில் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டி இசையை கையிலெடுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். தற்போது அங்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை ஓலி பரப்புகின்றனர்.

காலை ஆறு மணி, காலை சாப்பாட்டிற்கு பின், காலை 11:30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் என குறிப்பிட்ட இடைவெளியில் பாடல்களை இடுகின்றனர். பாடல்கள், தங்களை தேவையில்லாத எதையும் சிந்திக்க விடாமல் அதற்கு நேர்மாறான நல்ல எண்ணங்களை தருவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்