'விவசாயி' தான் என் 'சாய்ஸ்'... 'பெண் என்ஜீனியர்' தேர்ந்தெடுத்த 'மாப்பிள்ளை'... சீதனமாக 'டிராக்டர்' கொடுத்த 'மாமனார்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது வாழ்க்கைத் துணையாக  லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைகளை தேர்ந்தெடுக்காமல், விவசாயியை கரம்பிடித்த பெண் என்ஜீனியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

'விவசாயி' தான் என் 'சாய்ஸ்'... 'பெண் என்ஜீனியர்' தேர்ந்தெடுத்த 'மாப்பிள்ளை'... சீதனமாக 'டிராக்டர்' கொடுத்த 'மாமனார்'...

திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவருடைய மகள் அரசம்மா. பொறியியல் பட்டதாரியான அரசம்மாவுக்கு, லட்சுமணன் பல இடங்களில் வரன் தேடினார். அப்போது ராணுவ பணி, வெளிநாட்டு பணி, தனியார் மற்றும் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பலர் பெண் கேட்டு வந்தும் அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தேப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள் என்பவர் தனது மகன் விவசாயியான சிவக்குமாருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதனையடுத்து லட்சுமணன் தனது மகள் அரசம்மாவிடம், சிவக்குமாரை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? என கேட்டுள்ளார். அவரும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி சிவக்குமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன் மருமகன் சிவக்குமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.

இக்காலக்கட்டத்தில் பல லட்சம் ஊதியம் வாங்கும் நபர்களுக்கு பெண் கொடுக்க பலர் விரும்புவார்கள். ஆனால் விவசாயிக்கு தனது மகளை திருமணம் செய்து, சீதனமாக டிராக்டர் வழங்கிய லட்சுமணன் செயல் மிகவும் பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FARMER, FEMALE ENGINEER, MARRIED, THIRUVANNAMALAI