'ரூ.377 கோடி செலவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வீடு!'.. 'கொரோனா தாக்கம் முடிஞ்சதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!'.. அசத்தும் தமிழக அரசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரானா வைரஸ் பேரிடரால் இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாக தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

'ரூ.377 கோடி செலவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வீடு!'.. 'கொரோனா தாக்கம் முடிஞ்சதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!'.. அசத்தும் தமிழக அரசு!

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் முதலீடே வரவில்லை என்றும், பின்னர் வழக்கமாக வரும் முதலீடுதான் என்றும், இறுதியில் 25 சதவீதம் முதலீடு வந்துள்ளதாகவும் அவரே தெரிவித்தார். இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எவ்வளவு நாளைக்குத்தான் ஸ்டாலின் ஒன்றும் அறியாதவர் போல சொல்லிக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வாறு சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ அதேபோல் அவர்கள் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் 7,000 பேர் தங்குவதற்கு, ஸ்ரீபெரும்புதூர், வல்லம் வடகால் தொழில் பூங்காவில் ரூபாய் 377 கோடி செலவில் 9.50 ஏக்கர் நிலப்பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்றும், அடுத்த கட்டமாக 32 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 700 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்குவதற்கான குடியிருப்பு கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், தமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்