நான் முதல்ல சாமியாரே கிடையாதுங்க, போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துவிட்டு பரபரப்பு பேட்டி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சாமியார் அன்னப்பூரணி தான் ஒரு சாமியாரே கிடையாது என்று கூறியுள்ளார்.
காவல் ஆணையரிடம் புகார்:
காவல் ஆணையரிடம் புகார் அளித்துவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, தன்னைப் பற்றி அவதூறுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அதாவது தன்னை போலி சாமியார் என்றும் சாமியார் என்றும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் உண்மையில் நான் சாமியாரே முதலில் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ஆன்மீகப் பயிற்சி:
நான் இங்கு வந்துள்ளது ஆன்மீகப் பணி செய்வதற்காக மட்டுமே தொடர்ந்து அதனை மட்டுமே செய்வேன் என்றும் கூறியுள்ளார். இதை உணர்ந்து என்னிடம் வருகிறவர்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் பயிற்சி அடைந்த பக்தர்களுக்கு மட்டும் தான் நான் என்னவா இருக்கிறேன் என்று சொல்ல முடியும். மற்றவர்களால் அதனை உணர்ந்துக்கொள்ள ,முடியாது என்று கூறினார்.
இந்து அமைப்புகள் புகார்:
மேலும், 5 இந்து அமைப்புகளில் இருந்து புகார் அளித்தது குறித்து கேட்டபோது அவ்வாறு எதுவும் எனக்கு தகவல் வரவில்லை என்றும், காவல் நிலையத்தில் இருந்தும் எந்த அழைப்பும் வரவில்லை என்றும் கூறியுள்ளார் மேலும், திடீரென்று சாமியாராக அவதரித்தது எப்படி என்ற கேள்விக்கு, உங்களுக்கு தான் இப்போது தெரிகிறது ஆனால் நான் கடந்த ஆறு வருடங்களாக மக்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆதி பராசக்தியின் மறு உருவமா?
மேலும், ஆதி பராசக்தியின் மறு உருவமாக உள்ளீர்களா? என்ற கேள்விக்கு நான் என்றைக்குமே அப்படி சொன்னதில்லை. நான் என்றைக்கும் கடவுளின் அவதாரம் என்றும் கூறியதில்லை என்றும் பதிலளித்தார். தன்னிடம் ஆன்மீக பயிற்சி பெறுபவர்கள் அந்த மாதிரியாக சொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அவதூறு பரப்புவர்களால் என்னை உணர்ந்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
பயிற்சி என்றால் என்ன?
மேலும், பயிற்சி என்றால் என்ன? என்ன மாதிரியான பயிற்சி அளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும் தர்மம் தான் ஜெயிக்கும் என்று கூறிவிட்டு விட்டு நகர்ந்து சென்றார்.
மற்ற செய்திகள்