"மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க!".. "மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்!"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கடிதம் எழுதியுள்ளது.

"மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க!".. "மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்!"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி!

முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக் கழக விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கக் கோரப்பட்டிருந்தது. ஆனால் விடுதிகளில் இருக்கும் மாணவர்களின் உடமைகள் விடுதிகளிலேயே இருக்கும் பொழுது, அங்கு கொரோனா மையம் அமைப்பது பற்றி குழப்பங்கள் எழுந்தன.

இந்த நிலையில், விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கடிதம் எழுதியுள்ளது.  மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு,

பல்கலைக் கழக துணைவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் விடுதிகளில் உடமைகளை வைத்து பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்ட மாணவர்கள் தங்கள் உடமைகளை எப்படி எடுப்பார்கள், எப்படி சென்னை செல்வார்கள் உள்ளிட்ட கேள்விகள் மாணவர்களிடையே எழுந்துள்ளன.

TRENDING NEWS

மற்ற செய்திகள்