'அனைவருக்கும் ’விலையில்லா’ வாஷிங்மெஷின்... வீட்டில் ஒருவருக்கு ’அரசு’ வேலை’... ’இன்னும் வியக்க வைக்கும் பல திட்டங்கள்...' - மாஸ் காட்டிய அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று (14-03-2021) வெளியிடப்பட்டது.

'அனைவருக்கும் ’விலையில்லா’ வாஷிங்மெஷின்... வீட்டில் ஒருவருக்கு ’அரசு’ வேலை’... ’இன்னும் வியக்க வைக்கும் பல திட்டங்கள்...' - மாஸ் காட்டிய அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிடப்பட்டது.

                        AIADMK election manifesto released

இந்நிலையில், கட்சித் தலைமையகத்தில் இன்று (14-03-2021) ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.

                                      AIADMK election manifesto released

அதிமுக-வின் தேர்தல் அறிக்கையை மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள அதிமுக தேர்தல் அறிக்கையில் வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு,

அம்மா இல்லம் திட்டம் மூலம்

அனைவருக்கும் வீடு.

அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின் திட்டம்.

வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி.

ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்

அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா

கல்விக் கடன் ரத்து

                               AIADMK election manifesto released

அனைவருக்கும் இலவச சூரிய சக்தி மின் அடுப்பு.

கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.

மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர்.

அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்.

மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும்

மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்.

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்.

ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

மற்ற செய்திகள்