“வலதுபுற மார்பகத்தையே அகற்றிட்டாங்க” .. 'அங்காடித் தெரு’ சிந்துவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.. கலங்க வைக்கும் பேட்டி! வீடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு.

“வலதுபுற மார்பகத்தையே அகற்றிட்டாங்க” .. 'அங்காடித் தெரு’ சிந்துவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.. கலங்க வைக்கும் பேட்டி! வீடியோ

இந்தப் படத்தில் மகேஷ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை சிந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அங்காடித் தெரு மட்டுமின்றி சில தமிழ் படங்களிலும் சிந்து நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் சிந்து நடித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் வருடம் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து, அப்போது ஒரு வீடியோவை வெளியிட்டு சிந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கேட்டிருந்தார். நடிகர்கள் சாய் தீனா, கார்த்திக், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ரோபோ ஷங்கர், ஶ்ரீ மன், ராகவா லாரன்ஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சிந்துவுக்கு உதவிகள் செய்தனர்.

Angadi Theru Actress Sindhu Suffering again from Breast Cancer

இந்நிலையில் நடிகை சிந்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தமது உடல்நிலை குறித்தும், தற்போது தான் எடுத்து வரும் சிகிச்சை குறித்தும், தமது குடும்பம் குறித்தும் பேசியுள்ளார். நடிகை சிந்து பேசியதாவது, "முதல்முறை புற்று நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மீண்டு வந்தேன். கீமோ தெரபி சிகிச்சை பெற்று வந்தேன்.

ஆங்கில மருந்து செட் ஆகவில்லை. எனவே நாட்டு மருத்துவம் பக்கம் சென்றேன். 50% சரியானேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வர வேண்டி இருந்தது. 48 நாள் சிகிச்சை 38 நாளில் திரும்ப வர வேண்டி இருந்தது. கீமோ தெரபி செய்து எனது கை நரம்புகள் செயலிழக்க ஆரம்பித்தன. வலது கை வீக்கம் ஏற்பட காரணம் என்னுடைய வலது புற மார்பகம் புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. அதனால் ஏற்பட்ட வீக்கம் இன்னும் உள்ளது. இதோடு தான் நான் போராடிக் கொண்டு உள்ளேன்.

Angadi Theru Actress Sindhu Suffering again from Breast Cancer

கடந்த 2-3 ஆண்டுகள் என்னுடைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியால் சமாளித்து வந்தேன். சமீபத்தில் ஒரு சீரியலில் கமிட் ஆனேன். ஆனால் சில ஒவ்வாமை காரணமாக இந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளேன். என்னுடைய இன்னொரு பக்க மார்பகத்திலும் புற்றுநோய் பரவி உள்ளது.  அறுவைச் சிகிச்சை முன் ஸ்கேன் எடுக்க வேண்டும். என்னுடைய வலி வேதனை யாருக்குமே தெரியாது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது. வீட்டு வாடகை, சிகிச்சை, உணவு,  என் குடும்பத்திலும் பிரச்சினை உள்ளது" என நடிகை சிந்து கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.

SINDHU, CANCER, ACTRESS SINDHU

மற்ற செய்திகள்