“கடிதம் எழுதிவைத்து விட்டு”... கொடைக்கானல் காட்டேஜில் தங்கியிருந்த... ஐடி தம்பதி எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடைக்கானலில் மென்பொறியாளர்களான இளம் தம்பதி ஆஸ்திரேலியாவுக்கு செல்ல போதிய பணம் இல்லாததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கடிதம் எழுதிவைத்து விட்டு”... கொடைக்கானல் காட்டேஜில் தங்கியிருந்த... ஐடி தம்பதி எடுத்த விபரீத முடிவு!

ஒரு வருடத்துக்கு மேலாக அட்டுவப்பட்டி காட்டேஜில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியர் கோபி கிருஷ்ணன், நந்தினி. மென்பொருள் திட்டப்பணி செய்துவந்த இருவரும் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, தம்பதி இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.

வீட்டை பரிசோதித்ததில், களைக்கொல்லி பூச்சி மருந்து பாட்டில்கள் குடித்து இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆஸ்திரேலியா செல்ல பணம் இல்லாததால், இருவரும் தற்கொலை செய்துகொள்வதாக தெலுங்கில் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது.

தற்கொலை எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வந்தால் வேறொரு அற்புதமான வாழ்க்கை காத்துக் கொண்டு இருக்கிறது.  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, அதனை மாற்றிக்கொள்ள, கீழ்காணும் எண்களுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம். மாநில உதவிமையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

மற்ற செய்திகள்