சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து! மக்கள் கண்ணீர்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரிவாக்குளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் நேற்று இரவு விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுவர்களில் விழுந்த விரிசல் அதிகமாக உருவானதால் இன்று காலையிலிருந்தே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். குடியிருப்பில் உள்ள 24 வீடுகளில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மக்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் குடியிருப்பு மொத்தமாக இடிந்து தரைமட்டமானது. மக்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதேசமயம் வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் இடிபாடுகளுக்குள் சிக்கின.
கண் எதிரே தங்கள் வாழ்ந்து வந்த வீடு இடிந்து விழுந்ததை பார்த்த மக்கள் நொறுங்கி போயினர்.
இதுகுறித்து அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவிக்கையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தவை, எனவே இது போன்ற கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த நிதியாண்டில் 7500 புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்