“மாசாணி அம்மன் கொடுத்த ஃபார்முலா!”.. ‘கொரோனா’வுக்கு மருந்துடன் வந்த முதியவர்.. ‘ஆச்சரியத்தில் உறைந்த கலெக்டர்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி, உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக சீனா தொடங்கி,பாதிக்கப்பட்ட உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். இதுவரை 1,700 பேரின் உயிர் குடித்துள்ள இந்த நோயால் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் சீனப் பயணிகளும், சீனாவில் இருந்து வரும் தமிழகத்துக்கு வரும் தமிழர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் பகுதியில் உள்ள வேதாளை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்கிற முதியவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவகலத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொண்டு, அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிட மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் தன் கனவில் தோன்றிய மாசாணி அம்மன், கொரோனா நோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான மூலிகை மூலத்தையும், மருந்தை தயார் செய்யும் ஃபார்முலாவையும் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அதன் அடிப்படையில் தயாரித்த மருந்தினை இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்துவிட்டு, அதனை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்குமாறும் குறிப்பிட்டிருந்தார். தவிர, மாசாணி அம்மன் அருளால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து, தான் கொண்டுந்த மருந்து பொட்டலங்களை கொடுத்துள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.