கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் இருந்த கோடம்பாக்கத்தை... 'முந்திய' புறநகர் மண்டலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் இருந்த கோடம்பாக்கத்தை... 'முந்திய' புறநகர் மண்டலம்!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கோடம்பாக்கம் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்து இருந்தது.

இந்த நிலையில் கோடம்பாக்கம் மண்டலத்தை அம்பத்தூர் மண்டலம் முந்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:-

அம்பத்தூர் - 1,401 பேர்

கோடம்பாக்கம் - 1,349

அண்ணாநகர் - 1,198

அடையாறு - 1,012

திரு.வி.க.நகர் - 952

வளசரவாக்கம் -900

தேனாம்பேட்டை - 804

ராயபும் -796

தண்டையார்பேட்டை - 645

மாதவரம் - 568

ஆலந்தூர் - 520

பெருங்குடி - 484

சோழிங்கநல்லூர் -482

திருவொற்றியூர் - 423

மணலி - 8

மற்ற செய்திகள்