தமிழ்நாட்ல ரொம்பவே 'ஆபத்தான' 846 இடங்கள்... 'மொத' எடம் இதுக்குத்தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் விபத்துக்கள் நடைபெறும் 846 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழ்நாட்ல ரொம்பவே 'ஆபத்தான' 846 இடங்கள்... 'மொத' எடம் இதுக்குத்தான்!

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து துறை அமைச்சகம், தமிழ்நாட்டில் அதிகம் விபத்து நடைபெறும் 846 இடங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.அந்த இடங்கள் குறித்த விவரங்கள்,சாலை பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை செயலாளர்,நெடுஞ்சாலை துறை செயலர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை பிராந்திய அலுவலகத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி, சென்னை மண்ணூர்பேட்டை அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச்-சிடிஹெச் சாலை ஜங்சன் பகுதிதான் கடந்த 3 ஆண்டுகளில் அதிகம் விபத்து நேரிட்ட சந்திப்பு பகுதி என்றும்,அங்கு 775 விபத்துகள் நடந்துள்ளன என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2-வது இடத்தை பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நஸரத்பேட்டை சந்திப்பு பிடித்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் 520 விபத்துகள் நடந்துள்ளன. 3-வது இடத்தை தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையில் உள்ள போரூர் டோல்கேட் பகுதி பிடித்துள்ளது.

இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 423 விபத்துகள் நடந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த 3 இடங்களிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு தேசிய நெடுஞ்சாலையின் தமிழக பிரிவானது ஏற்கனவே 128 இடங்களில் நடவடிக்கை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,மீதமுள்ள 198 இடங்களில் இனி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 38% உயிரிழப்புகள் சாலை விபத்துகளால் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

ACCIDENT, TAMILNADU