'இனிமேல் தமிழ்ல ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க...' 'தமிழோடு இன்னும் 3 மொழிகள்...' - அட்டகாசமான அறிவிப்பை சொன்ன அமேசான்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது செயலியில் தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது.

'இனிமேல் தமிழ்ல ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க...' 'தமிழோடு இன்னும் 3 மொழிகள்...' - அட்டகாசமான அறிவிப்பை சொன்ன அமேசான்...!

கொரோனா காலம் என்பதால் மக்கள் அதிகமாக புழங்குவது ஆபத்தானது. எனவே தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அரசும் சுகாதரத் துறையும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் தீபாவளி,  கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதை கருத்தில் கொண்டும், இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. அமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அந்த செயலியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்களுக்கு வெகுவாக உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்