வருது.. வருது.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு... தமிழக அரசு சொல்வது என்ன? பரபரப்பு தகவல்கள்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான உடற்தகுதி பரிசோதனை தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடப்பட்டது

வருது.. வருது.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு... தமிழக அரசு சொல்வது என்ன? பரபரப்பு தகவல்கள்!!

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற 15-ந்தேதியும் அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக நடைபெறும் நிகழ்வு தான் ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது, ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி  பெரும், காளைகள் மற்றும் காளை உரிமையாளர், காளையை அடக்கும் வீரர்களுக்கும் வெகுமதியான பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

Alankanallur, Palamedu Jallikkattu on Thai pongal

பொங்கல் திருநாள் வருவதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போட்டிக்கான பயிற்சியில் காளைகள் ஈடுபடுத்தப்பட்டன. காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  தை பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. டிக்கெட் எடுக்கும்போது ‘மறக்காம’ இதையும் எடுத்துட்டு போங்க.. அமலுக்கு வந்த ‘புதிய’ கட்டுப்பாடுகள்..!

 

Alankanallur, Palamedu Jallikkattu on Thai pongal

இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேளரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஜல்லிகட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் அறிவிக்கவிக்கப்படவில்லை.

எதுக்குப்பா கல்யாணத்து அன்னைக்கே டைவர்ஸ் கேக்குற? மாப்பிள்ளை சொன்னத கேட்டு ஆடிப்போன கோர்ட்டு!

 

Alankanallur, Palamedu Jallikkattu on Thai pongal

இந்நிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறது.  அலங்காநல்லூரில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழாவில் அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் ஊர் விழா குழுவினர் மட்டும் முன்னேற்பாடு பணிகளை தொடங்கினர்.

Alankanallur, Palamedu Jallikkattu on Thai pongal

நாட்டு மாடுகள் அல்லாததை தகுதி நீக்கம் செய்தனர். மாட்டின் முதுகில் தழும்புகள் இருக்கிறதா எனவும் பரிசோதனை செய்யப்பட்டது. காளை வளர்ப்பவர்கள் காளைகளுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம், ஆதார் கார்டு, ரே‌ஷன் கார்டு உள்ளிட்டவை கொண்டு வந்து மருத்துவரிடம் சமர்ப்பித்தனர்.

JALLIKKATTU, ALANGANALLUR, ALANGANALLURJALLIKATTUVADIVASAL, PALAMEDUKJALLIKATTU, TNGOVT, MKSTALIN

மற்ற செய்திகள்