"யாருக்கும் ஆதரவில்லை.. போட்டியிட போவதுமில்லை".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சரத்குமார் அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"யாருக்கும் ஆதரவில்லை.. போட்டியிட போவதுமில்லை".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சரத்குமார் அறிக்கை!

Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவன் .. கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு.!

கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக  ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா  தனது 46 வயதில் உயிரிழந்தார்.

இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக (தமாகா) வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.

AISMK party Sarath Kumar about Erode East assembly bypoll

Images are subject to © copyright to their respective owners.

திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேட்பாளராக அறிவித்துள்ளார்.

இளங்கோவன், 2004 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். 1985 ஆம் ஆண்டு சத்யமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2019 பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

AISMK party Sarath Kumar about Erode East assembly bypoll

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனருமான சரத்குமார் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று (ஜன.24) காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

AISMK party Sarath Kumar about Erode East assembly bypoll

Images are subject to © copyright to their respective owners.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read | 101 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.. 5 வகை உணவு, சீர்வரிசைகள் என நெகிழ வைத்த மருத்துவ கல்லூரி..!

AISMK PARTY, SARATH KUMAR, AISMK PARTY SARATH KUMAR, ERODE, ERODE EAST ASSEMBLY BYPOLL

மற்ற செய்திகள்