'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொது மக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'!

இந்நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளதாகவும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பாக புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் திமுக அளித்துள்ள புகார் மனுவும் இடம் பெற்றுள்ளது.இந்த புகார் மனுவினை திமுகவின் சட்ட துறை செயலாளர் கிரிராஜன் அளித்துள்ளார்.