‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...’ ‘இந்த பகுதியை’ தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21-03-2021) ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்-அமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்று கூறினார்.
மேலும் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
ஆரணி பகுதியில் அதிக அளவில் விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். விசைத்தறி நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம், புதிய வருவாய் கோட்டம், மின் பகிர்மான வட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டன. இவ்வாறு பரப்புரையில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்