நெருங்கும் 'சட்டமன்ற' தேர்தல்... 'முதற்கட்ட' வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'அதிமுக' தலைமை!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கி வருகிறது.
இதில், சில தினங்களுக்கு முன் அதிமுக, தங்களது கூட்டணி கட்சியான பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், தமிழக முதல்வர் பழனிசாமி, எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
சட்டமன்ற பேரவை பொது தேர்தல் - 2021
கழக வேட்பாளர்கள் முதல் பட்டியல். pic.twitter.com/l73K5aoEqF
— AIADMK (@AIADMKOfficial) March 5, 2021
மேலும், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகமும், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதனும், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் தேன்மொழியும், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும் போட்டியிடவுள்ளதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்