புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கின்றபோதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
அக்கோரிக்கையை ஏற்று அந்த மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். அதை யாரும் மறைக்க முடியாது.
அதேபோல, சென்னைக்கு அடுத்து புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரியைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதனையும் நிறைவேற்றி தந்த அரசு தமிழக அரசு.
மேலும், புதுக்கோட்டையில் போட்டியிடும் விஜயபாஸ்கருக்கு ஆதரவு கேட்டு முதல்வர் பரப்புரை மேற்கொண்டபோது, ”சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறம்பட நிர்வகித்ததால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் சொல்லி, மருத்துவர்களிடம் சரியான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொல்லி கொரோனா பாதித்தவர்கள் மனம் குளிரும் அளவுக்கு செயல்பட்டார் விஜயபாஸ்கர்” என்று பாராட்டி பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்