‘பூஜ்ஜியம்’!.. நீண்ட நாள்களுக்கு பின் சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நீண்ட நாள்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘பூஜ்ஜியம்’!.. நீண்ட நாள்களுக்கு பின் சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவியது. அதனால் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் வரை நோய் தொற்று ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தொடர்ந்து 51-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

After months, Chennai reported zero covid-19 death

அந்த வகையில் நேற்று (11.07.2021) மாநிலத்தில் 2775 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 171 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

After months, Chennai reported zero covid-19 death

கடந்த மே மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதிதான் சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக இருந்தது.

After months, Chennai reported zero covid-19 death

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 33,418 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 47 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இணை நோய் இல்லாத 9 பேரும், 50 வயதுக்கு குறைவானவர்கள் 8 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்