என்ன இப்படி இறங்கிட்டாங்க...? 'வைரலான திருமண விளம்பரம்...' - கடைசியில தெரிய வந்த ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பணம் நகை எல்லாம் வேண்டாம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என, கொரோனாவிற்கு டஃப் கொடுக்கும் பெண்ணின் 'மணமகன் தேவை' விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே திருமணம் என்றால் ஏகப்பட்ட கன்டிஷன்களும், திட்டங்களும் இருக்கும். ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்யும் நபர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றியுள்ளனர் என ஒருவர் வெளியிட்ட விளம்பரம் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
ஒரு இணையதளத்தில், 'கோவிஷீல்டு இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்ட சுயமாக சம்பாதிக்கும் ரோமன் கத்தோலிக் பெண் தனக்கு வரப்போகும் கணவரும் கோவிஷீல்டு இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்' என மணமகன் தேவை என விளம்பரப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை சஷி தரூர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விளம்பரத்தை போஸ்ட் செய்து, 'விரைவில் இதுவும் சகஜமாகி விடுமோ?' என பதிவிட்டுள்ளார்.
அதோடு இதே விளம்பரத்தை மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் பதிவிட்டுள்ளனர். தற்போது வைரலாகி வரும் இந்த விளம்பரம் குறித்தான செய்திக்கு ஒரு சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த விளம்பரத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்