"'காதல்'ன்னு வந்துட்டா இங்க எதுவுமே தடையில்ல.. அதுக்கு இந்த ஜோடியோட 'லவ்' ஸ்டோரி தான் 'சாம்பிள்'.." 'காதலர்' தினத்தில் நடந்த அசத்தலான 'திருமணம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காதலுக்கு வயது, மதம், மொழி என எதுவும் தடை என்பதை காதலர் தினத்தன்று நிரூபித்து காட்டியுள்ளது ஒரு அசத்தல் ஜோடி. அவர்கள் யார், 'எப்படி சந்தித்து காதல் வயப்பட்டார்கள்?' என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

"'காதல்'ன்னு வந்துட்டா இங்க எதுவுமே தடையில்ல.. அதுக்கு இந்த ஜோடியோட 'லவ்' ஸ்டோரி தான் 'சாம்பிள்'.." 'காதலர்' தினத்தில் நடந்த அசத்தலான 'திருமணம்'!!

திருச்சியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர், கேரள மாநிலம் பம்பை பகுதியில் சபரிமலை சீஸனின் போது அங்கு ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். சபரிமலை சீசனில்லாத சமயத்தில், சொந்த ஊருக்கு செல்லாமல் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து, அதில் வரும் பணத்தை அவரது சகோதரியின் திருமண மற்றும் இதர செலவுகளுக்கும் அனுப்பி வந்துள்ளார் ராஜன். இதனால், தனது வாழ்க்கை பற்றியும், திருமணத்தை குறித்தும் ராஜன் எண்ணவேயில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, வேலையில்லாமல் தவித்த ராஜனை போலீசார் மீட்டு பத்தனம்திட்டா பகுதியிலுள்ள மகாத்மா ஜனசேவன கேந்திரம் என்னும் மையத்தில் சேர்த்துள்ளனர். அந்த மையத்தில் முதியவர்களை பராமரித்து, அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் மேற்கொண்டு வருகிறார்.

அதே மையத்தில், பெற்றோர்கள் இறந்து போனதால், சரஸ்வதி என்ற 64 வயது பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார். சரஸ்வதிக்கு பேச்சு குறைபாடு உள்ளது. இதனைத் தொடர்ந்து, ராஜனுக்கும், சரஸ்வதிக்கும் காதல் தோன்றியுள்ளது. இருவரும் தங்களது காதலை அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில், அவர்களின் காதலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

காதலர் தினமான நேற்றைய தினத்தில் இவர்களின் திருமணம், அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் நிகழ்ந்தது. தாங்கள் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்ட போது, எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றும், எந்தவித கேலி கிண்டலுக்கும் ஆளாகவில்லை என்றும் ராஜன் - சரஸ்வதி தம்பதியினர் கூறியுள்ளனர்.

காதலுக்கு வயதில்லை என்பதையும், இந்த உலகெங்கும் காதல் நிறைந்தே இருக்கிறது என்பதையும் இந்த வயதான தம்பதியர்கள் நிரூபித்துள்ளனர்.

மற்ற செய்திகள்