'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், புதிய ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பைத் தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

'மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள்'... 'தமிழக கல்வித்துறை அதிரடி அறிவிப்பு'... இந்த தேதி முதல் 'மாணவர் சேர்க்கை'!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படுவது சாத்தியமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

Admission of students in TN Government schools to commence 3 August

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  மாணவ -மாணவிகளுக்கு விண்ணப்பப் படிவமும் அன்றே வழங்கப்படும் என்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் தேதி மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்