VIDEO: காதை கிழிக்கும் ‘தகாத’ வார்த்தைகள்... லட்சுமி ராமகிருஷ்ணனுடன் LIVE-ல் 'மல்லுக்கட்டிய’ வனிதா...! - டிரெண்டாகும் வீடியோ!!! - லட்சுமிக்கு அமோக 'ஆதரவு’ தெரிவிக்கும் சமூக வலைதளம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா ஆகியோர் behindwoods-க்கு அளித்த பேட்டியில் நேருக்கு நேர் மோதிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா அவர்களின் மகள் வனிதா விஜயகுமார் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். தற்போது பிக் பாஸ் பிரபலமாக விளங்கும் வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27-ம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தி கொண்ட திருமணத்திற்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வனிதா விஜயகுமார் தனக்கு திருமணம் என அறிவித்த போது வாழ்த்திய பலரும் அவரின் திருமணம் முடிந்த பிறகு தங்களின் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். அதற்கான காரணம் வனிதா அவர்களின் தற்போதைய கணவர் பீட்டர் பால் இதற்கு முன்பே எலிசபெத் ஹெலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து வாங்கவில்லை என்பதுதான். மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் மீது காவல்நிலையதில் புகார் அளித்துள்ளார். மேலும் தன் கணவர் அதிகமாக குடிப்பார், இதற்கு முன்பே பல பெண்களுடன் சகவாசம் வைத்திருந்ததாகவும் பல வலுவான குற்றச்சாட்டுகளை பீட்டர் பால் மீது முன்வைத்தார்.
இதனையடுத்து சமீபத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் அவரது கணவர் பீட்டர் பாலுடன் நேர்காணல் செய்யும் வீடியோவை தனது யூடியுப்பில் வெளியிட்ட போது மீண்டும் சர்ச்சையாகியது. இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து behindwoods-க்கு அளித்த ஒரு நேர்காணலில் அமைதியாக பேசத்தொடங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை வனிதா அவர்கள் தகாத வார்த்தைகளில் திட்டி கொந்தளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Behindwoods Air-ல் வெளியான இந்த வீடியோவில் 12,000 பேருக்கு மேலாக லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக comment-ல் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் நடிகை மற்றும் சமூக ஆர்வலர் கஸ்தூரி அவர்களும் இந்த வீடியோ சம்பந்தமாக வனிதா அவர்களை கண்டித்தும், லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
My heart bleeds for you @LakshmyRamki . Please do not engage with cheap kuzhayadi sandai people. @vanithavijayku1 , You are really making this so bad for yourself. Take a break.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 20, 2020
மற்ற செய்திகள்