சேலையை அட்ஜெஸ்ட் பண்ணா கூட… ஃபேக் ஐடி ரோமியோக்கள் சேட்டை… கொந்தளித்த ரேகா நாயர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போலியான மேட்ரிமோனி தளம் ஒன்றில் நடிகை ரேகா நாயரின் சுய விவரங்கள் பதிவிடப்பட்டு சர்ச்சையானது. இதுகுறித்தும் இணையதளங்களில் நடக்கும் மோசடிகள் குறித்தும் நடிகை ரேகா நாயர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழில் சீரியல்கள், சினிமா என பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரேகா நாயர். இவரது புகைப்படத்துடன் போலியான தகவல்களைப் பதிவிட்டு மேட்ரிமோனி தளம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தனது கணவர் மற்றும் குழந்தை உடன் வசித்து வரும் ரேகா நாயர் இந்த ஆன்லைன் மோசடிகளைக் கண்டு கொந்தளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரேகா நாயர் கூறுகையில், “நான் என் கணவர் மற்றும் குழந்தை உடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கு வரன் தேடுவது போல் ஒரு மேட்ரிமோனி தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்துமே பொய். என் புகைப்படம் மட்டும் உண்மை. மற்றபடி நான் விவாகரத்து ஆனவள், வரன் தேடுகிறேன் என்ற தகவல்கள் எல்லாமே பொய்.
இது போல் ஆன்லைன் மோசடிகள் என் பெயரை வைத்து நடப்பது வழக்கமாகிவிட்டது. நான் ஏதோ ஒரு இன்ஸ்டா லைவ்-ன் போது செய்த எடுத்த வீடியோவை ஆடியோ மட்டும் மாற்றி ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி ஆபாச இணையதளங்களில் பதிவிடுகிறார்கள். நான் மீடியாவுக்கு வந்து புதிதில் இவை அனைத்துக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுத்தேன்.
இப்போது இது வழக்கமாகிவிட்டது. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நான் என் குடும்பத்துடன் சந்தோஷமாகத் தான் வாழ்ந்து வருகிறேன். நிறைய பெண்களை ஆபாசமாகப் புகைப்படத்தை மாற்றி அமைத்து அதை தவறாக வெளியிடுவது அதிகரித்துவிட்டது. நான் சார்ந்த எந்த ஃபேக் செய்திகள், புகைப்படங்கள் என எதையுமே நம்பாதீர்கள்.
இதை வேலை இல்லாதவர்கள் செய்யும் செயல் என கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். சேலை அணிந்து புகைப்படம் இருந்தாலும் அதை எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் மாற்றிவிடலாம் என்ற அளவுக்கு டெக்னாலஜி இருக்கிறது. இப்படியெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கிறது என உணர்ந்தாலே போதும் இதை நம்பமாட்டார்கள்.
மற்ற செய்திகள்