ரிலாக்ஸ் மோடில் யோகி பாபு.. ஷூட்டிங் நடுவே கிரிக்கெட் பிராக்டீஸ்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

ரிலாக்ஸ் மோடில் யோகி பாபு.. ஷூட்டிங் நடுவே கிரிக்கெட் பிராக்டீஸ்.. வைரலாகும் வீடியோ..!

Images are subject to © copyright to their respective owners.

சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர்களில் யோகி பாபுவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் அவர் அவ்வப்போது கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் யோகி பாபு அடுத்த கட்ட வளர்ச்சியை சினிமாவில் எட்டினார்.

Images are subject to © copyright to their respective owners.

ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு குல தெய்வம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முருகன் மீது தீவிர பக்தி கொண்ட யோகிபாபு அவ்வப்போது புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது வழக்கம். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட யோகி பாபு அவ்வப்போது தான் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பகிர்வதுண்டு.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் தற்போது, கிரிக்கெட் பிராக்டீஸ் செய்யும் வீடியோவை யோகி பாபு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

YOGIBABU

மற்ற செய்திகள்