இளந்தாரி கறி விருந்து.. "கோழியா சேவலானு கறிய சாப்பிடும் போதே கண்டுபிடிக்கலாம்".. வேல. ராமமூர்த்தி EXCLUSIVE!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் இலக்கிய சூழலில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் வேல. ராமமூர்த்தி.

இளந்தாரி கறி விருந்து.. "கோழியா சேவலானு கறிய சாப்பிடும் போதே கண்டுபிடிக்கலாம்".. வேல. ராமமூர்த்தி EXCLUSIVE!

தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர். குறிப்பாக மதயானைகூட்டம், சேதுபதி, கிடாரி, கொம்பன், பாயும் புலி, வனமகன், அறம், அண்ணாத்த ஆகிய படங்கள் முக்கியமானவை. கிடாரியில் இவர் செய்த கொம்பையா பாண்டியன் கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் என்றால் மிகையாகாது.

கமுதி பெருநாழியைச் சார்ந்த எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி. இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்கள்  புகழ்பெற்றவை. மேலும் இவர் எழுதிய சிறுகதைகளும் புகழ் பெற்றவை.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பிராண்மலை படத்தின் "இளந்தாரி பய" வசனம் இவரை ரசிகர்கள் டிரெணடாக்கி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை வேல. ராமமூர்த்தி அளித்துள்ளார்.

Actor Writer Vela Ramamoorthy about His Favourite Foods

அதில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் ராணுவ வாழ்க்கை ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய உணவு பழக்கம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கறி விருந்தை உண்டு கொண்டே பேசிய வேல. ராமமூர்த்தி, "சாப்பிடும் போதே சாதா கோழியா? நாட்டுக் கோழியா? என்று கண்டு பிடிக்க முடியுமா?" என்ற கேள்விக்கு "பிராய்லர் கோழியா, நாட்டுக் கோழியானு யார் வேண்டுமானாலும் கண்டு பிடிக்கலாம். கோழியா? சேவலா? என்று கண்டுபிடிக்கலாம். எப்படி என்றால் சேவல் கறி சாப்பிடும் போது நார் நாரா சக்கை சக்கையா  வரும். இப்போ சாப்பிடுறது கோழி தான். ஆனால் எங்க ஊர் கோழி இல்லை. பண்ணைக்கோழி இது." என வேல. ராமமூர்த்தி பதில் அளித்தார்.

VELA RAMAMOORTHY, CHICKEN, MUTTON, FOOD, TAMILNADU FOOD, SOUTH INDIAN FOOD

மற்ற செய்திகள்