#Video: 'இந்த ரஜினி, கமல் 2 பேரையும் அடிக்குற அடியில'.. 'இனி எந்த நடிகனும்'... 'இது விஜய்க்கும் சேர்த்துதான்!'.. 'ரஜினி படத்தையே உதாரணம் காட்டி'.. கொந்தளித்த சீமான்!.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பத்திரிகையாளர்களிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ள பல்வேறு கருத்துக்களை இங்கு சுருக்கமாக இங்கு காணலாம்.
“ரஜினிகாந்தின் படத்தை நாங்கள் குறை சொல்வதில்லை. இந்த 71 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார். அவருடைய படங்கள் பற்றியும் நடிப்பு பற்றியும் நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் எங்களுடைய வழிபாடு, வழக்காடு மன்றம் என்று எல்லா இடங்களிலும் நாங்கள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் மற்றும் எங்களுடைய மொழி அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆகையால் நாங்கள் ஒரு தேசிய இன எழுச்சியை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திரை கவர்ச்சியை போட்டு அதை மூடி மறைத்தால் எப்படி.? தவிர கமல் ரஜினிகாந்த் இருவருமே எம்ஜிஆர் பற்றி பேசுகிறார்கள் ஆனால் எம்ஜிஆருக்கு பிரபாகரன் மற்றும் ஈழம் பற்றிய உறுதியான நிலைப்பாடு இருந்தது. அந்த வகையில் இவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன?
திரைப்படத்தில் நடித்து விட்டால் போதும் எங்கள் மக்களை ஆளலாம் என்று நினைப்பது மக்களின் மீதான மதிப்பீட்டை உதாசீனப்படுத்துவதாகிறது. நான் நடித்து இருக்கிறேன் என்றால், நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களைத்தான் நேரடியாக சந்திக்கிறேன்.
அத்துடன் எங்களுடைய வரலாறு தெரியாமல் எப்படி எங்களை வழிநடத்திச் செல்ல முடியும்? இவர்களால் வ.உ.சி, காமராஜர் , கக்கன் ,சிங்காரவேலர் ,முத்துராமலிங்க தேவர் ,அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், பண்டார வன்னியன், பூலித்தேவன் ,வேலுநாச்சியார் ,மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம் தீரன் சின்னமலை இவர்களெல்லாம் யார் என்பது குறித்து ஒரு இரண்டு நிமிடங்கள் இவர்களால் பேச முடியுமா?
இது என் நாடு, என் நிலம், என் உரிமை.. காலா படத்தில் என் மண்.., என் உரிமை என்று நீங்கள் தானே (ரஜினியை நோக்கி) பேசினீர்கள் அதைத்தான் நானும் பேசுகிறேன். நடித்து விட்டால் மட்டும் போதும். இந்த மக்களிடம் ஆட்சியை, அதிகாரத்தை செலுத்தலாம் என்று நினைப்பது என்பது இந்த மக்களை இழிவாக கருதுவதற்கு சமம்.
ஆகையால் ரஜினியையும், கமலையும் அடிக்கிற அடியில் விஜய் உட்பட இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வராது. இது எல்லோருக்கும் சேர்த்து தான். நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி என்று நினைக்கிற கொடுமைக்கு இத்துடன் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்.” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்