"ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது..!".. அரசியல் கட்சி தொடர்பாக மனம் திறந்த நடிகர் விஜய்!!.. ‘மின்னல் வேகத்தில் வெளியான’ அதிகாரப்பூர்வ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான தகவல்களை அடுத்து, வரும் தேர்தலில் அவர் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், “நாங்கள் கட்சிக்கான பெயரை பதிவு செய்தது உண்மை தான். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினுடைய அங்கீகாரத்திற்காக அதை செய்தோம். அதனால், நாளைக்கே நாங்கள் அரசியலுக்கு வரப் போகிறோம் என்று அர்த்தமல்ல” என்று விளக்கம் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்த மின்னல் வேகத்தில் விஜய் தரப்பிலிருந்து ஒரு செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவும் கட்சி பணியாற்றவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
Official statement from #ThalapathyVijay's Side!!!#Thalapathy @actorvijay @BussyAnand @Jagadishbliss @V4umedia_ pic.twitter.com/z7hz7ywpin
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 5, 2020
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்