அடடே..! விஜய் அம்மா விரும்பி பார்க்கும் 3 பிரபல சீரியல்கள்.. Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
ஷோபா
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி பன்முக திறமை கொண்டவராக திகழும் ஷோபாவை கலை பாரம்பரிய ஆலோசகராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நியமித்திருந்தார். தற்போதும் இசையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் ஷோபா, தன்னுடைய கலையுலக வாழ்வு மற்றும் தனது குடும்பம் பற்றி பல்வேறு தகவல்களை ஷோபா பகிர்ந்திருக்கிறார்.
நடை பயிற்சி
தனது அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து பேசிய அவர் காலை வேளைகளில் வீட்டில் பூஜை செய்து வருவதாகவும் தனது வீட்டில் அனைத்து கடவுள்களின் புகைப்படங்களும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தனது குடும்பத்தினர் அனைவர்க்கும் எம்மதமும் சம்மதம் என தெரிவித்திருந்த ஷோபா மாலை வேளையில் வாக்கிங் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"தினமும் சாயந்தரம் தியோசாபிகல் சொசைட்டி உள்ளே வாக்கிங் போவேன். பெரும்பாலும் கணவர் கூட வருவாரு. சில சமயங்கள்ல எனது ஃப்ரண்ட்ஸ் கூட போவேன். அதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த உடனே சீக்கிரமே இரவு உணவு சாப்பிடுவோம். தினசரி சில சீரியல்கள் பார்ப்பேன்" என்றார்.
Images are subject to © copyright to their respective owners.
சீரியல்
அப்போது குறுக்கிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன், "என்ன சீரியல் பார்ப்பீங்க? என கேட்டார். இதற்கு புன்னகையுடன் பதில் அளித்த ஷோபா,"எதிர் நீச்சல், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த மூன்று சீரியல்களையும் பார்த்துட்டு தூங்கிடுவேன். இதுதான் என்னோட தினசரி பிளான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்த்து வந்ததாக குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்