VIDEO: “அது ஒரு 5 நிமிஷம் நடந்ததுதான்!”.. ‘பணத்தை வைத்து சூதாட்டம் நடந்துச்சா?’.. நடிகர் ஷாம் Exclusive!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நுங்கம்பாக்கத்தில் உள்ள தமது அடுக்குமாடி வீட்டில் தமது வீட்டில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் ரெய்டு வந்தது உள்பட பல்வேறு விஷயங்களை நடிகர் ஷாம் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்யேகமாக பகிர்ந்துள்ளார்.

VIDEO: “அது ஒரு 5 நிமிஷம் நடந்ததுதான்!”.. ‘பணத்தை வைத்து சூதாட்டம் நடந்துச்சா?’.. நடிகர் ஷாம் Exclusive!

“நண்பர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து போக்கர் விளையாடிவிட்டு, மதிய உணவு, இரவு உணவு உண்டுவிட்டு கிளம்பிவிடுவது வழக்கம். அப்படித்தான் இந்த லாக்டவுனிலும் நண்பர்கள் சந்திப்பது என முடிவு செய்தோம். சரி அத்துடன் விளையாடலாம் என முடிவு செய்தோம். அதனாலும் லாக்டவுனில் வேற எங்குமே போக முடியாததாலும், சூதாட்டம் நடப்பதாக தவறான தகவல்களை பரப்பிவிட்டார்கள்.

நுங்கம்பாக்கம் அதிகாரிகள் வந்தார்கள். அவர்கள் பரிசோதித்த பின்னர் கூட, சந்தேகப்பட்ட படி எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள். அதற்காக ஒரு கையெழுத்தும் கேட்டார்கள். அதனால் நானும் என் நண்பர்களும் சென்று கையெழுத்து போட்டு வந்தோம். அதுக்கு அப்புறம் இந்த கொரோனா நேரத்துல இப்படி ஒன்று கூடுதலை தவிர்க்கலாம் என்று கூறினார்கள்.

அடிப்படையில் நான் தொழில் குடும்பத்தில் இருந்து திரைப் பயணத்துக்கு வந்தேன். எனக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.  இதனால் நான் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதற்கானது ஒன்றும் இல்லை. நண்பர்கள் சந்திச்ச பிறகு எவ்வளவு நேரம் பேசிக்கொண்டே இருப்பது? வழக்கமாக கிரிக்கெட் உள்ளிட்ட எதையாச்சும் விளையாடுவோம். ஆனால் இந்த டைம் வெளில போக முடியாது என்பதால், போக்கர் விளையாண்டோம். அதில் ஜெயிச்சா, நான் சாப்பிட்டதுக்கு நீ பில் கட்டணும், என்பது போன்ற அளவில்தான் இந்த நட்பு ரீதியான விளையாட்டு இருந்தது. இதில் பணப் பந்தயமோ, சூதாட்டமோ இல்லை.

வெளியில் சொல்வது போல FIRலாம் போடல. சினிமாவில் இருக்கும் செலிபிரிட்டி என்பதால் இப்படி ஒண்ணுக்கு ரெண்டா சொல்லுவாங்க என்று என் நண்பர்கள் சொன்னார்கள். நான் பெரும்பாலும் நடிகர், நடிகையர் நண்பர்களுடன் பெர்சனல் விசேஷங்களில் கலந்துகொண்டதில்லை. அன்றிரவு கூட சினிமா நண்பர்கள் யாருமே அந்த இடத்தில் இல்லை. அதிகாரிகள் வந்தபிறகு கூட, முழுமையாக பரிசோதிக்கச் சொல்லி நானே சொன்னேன். நான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்தாலும் பதில் சொல்லக் கூடிய நிலையில்தானே இருக்கிறோம்?

வெளிநாட்டிற்கு சென்று நான்  நண்பர்களுடன் கசினோவிற்கெல்லாம் போயிருக்கிறேன். ஆனால் சென்னையிலே அதெல்லாம் நாங்க பண்ணோம்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்! என்னிடம் கேட்டிருந்தால் கூட நான் விளக்கம் சொல்லியிருப்பேன். ஆனால் எதையும் சரியாக புரிந்துகொள்ளமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவிட்டன!

2009-10 நேரத்தில் வீட்டு வேலை செய்வதற்காக வந்த ஒரு பெண்மணி, தனது 16 வயதுக்கு மேற்பட்ட மகளையும் தன்னுடனே தங்கவைத்துக்கொள்ள அனுமதி கேட்டார். அந்த பெண்ணுக்கு கல்வி உதவிகளைக் கூட செய்தோம். ஆனால் அதையெல்லாம் பற்றி ஏதோதோ சொன்னார்கள். அப்போதே அதை தெளிவுபடுத்தினேன்.  தற்போது லாக்டவுன் நேரத்தில் தளர்வுகள் இருந்ததால் தற்போது ரொம்ப நாள் ஆச்சு என்று நண்பர்கள் அன்று சந்தித்தோம், மொத்தத்தில் ஒரு 5 நிமிட விசாரணைதான். நண்பர்களாகிய நாங்கள் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வந்து இயல்பாக அடுத்த வேலையைத் தொடர்ந்தோம். ஆனால் அது எப்படி சர்ச்சை ஆச்சு என்றே புரியவில்லை!”, என்று ஷாம் கூறினார். 

மற்ற செய்திகள்