ரஜினிகாந்தின் புதிய கட்சியின் ‘பெயர்’ இதுதானா..? வெளியான பரபரப்பு தகவல்.. அப்போ ‘சின்னம்’ என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் புதிய கட்சியின் ‘பெயர்’ இதுதானா..? வெளியான பரபரப்பு தகவல்.. அப்போ ‘சின்னம்’ என்ன..?

சமீபத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரஜினிகாந்த் அளித்தார். இதனைத் தொடர்ந்து கட்சி தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார்.

Actor Rajinikanth's new political party name

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் சேவை கட்சிக்கு ‘ஆட்டோ’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி ‘பாபா முத்திரை’ சின்னத்தை ஒதுக்க கேட்டதாகவும், ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்