"தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி".. நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சி பதிவு.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக வேளாண் பட்ஜெட்டில் பல பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக முதல்வர் முக. ஸ்டாலின் மற்றும் வேளாண்துறை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் கார்த்தி.

"தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி".. நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சி பதிவு.. முழு விபரம்..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | எப்படி இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..!

வேளாண் பட்ஜெட்

தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பதிவியேற்றதில் இருந்து வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலம் குறித்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். உழவர் பெருமக்களின் நலனுக்கான உழவன் அறக்கட்டளையை நடத்தி வரும் கார்த்தி தனது அறிக்கையில் பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் குறித்தும் பட்டியலிட்டிருக்கிறார்.

Actor Karthi Praises TN CM Stalin over Agriculture Budget

Images are subject to © copyright to their respective owners.

அறிக்கை

நடிகர் கார்த்தியின் அந்த அறிக்கையில்,"நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு, மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது.

இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவற்றுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Actor Karthi Praises TN CM Stalin over Agriculture Budget

Images are subject to © copyright to their respective owners.

இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுபோன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | போச்சுடா.. பிரபல இந்திய வீரருக்கு அறுவை சிகிச்சை.. அடுத்த 5 மாதங்கள் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

KARTHI, MKSTALIN, CM MK STALIN, AGRICULTURE BUDGET

மற்ற செய்திகள்