"ரொம்ப நன்றிங்க.. மீட்டுக் கொடுத்துட்டீங்க.!".. உணர்ச்சிப்பெருக்கில் காவல் ஆணையர் காலில் விழுந்த நடிகர் போண்டாமணி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் போண்டா மணி.

"ரொம்ப நன்றிங்க.. மீட்டுக் கொடுத்துட்டீங்க.!".. உணர்ச்சிப்பெருக்கில் காவல் ஆணையர் காலில் விழுந்த நடிகர் போண்டாமணி.!

Also Read | Vaathi : “நான் தமிழ் நடிகன் .. எனக்கு தமிழ் தான் பேச வரும்” - ‘வாத்தி’ தனுஷ்..!

சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்த போண்டா மணி, அதன் பின்னர் விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். போண்டா மணி நடித்த ஏராளமான காமெடி காட்சிகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாகவே உள்ளது.

இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மணி அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரின் சிகிச்சைக்காக பண உதவி தேவைப்படுவதாவும் வீடியோ ஒன்றை போண்டா மணி வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, பல்வேறு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள், போண்டா மணியின் சிகிச்சைக்காக பண உதவியும் செய்திருந்தனர்.

இதன் பின்னர், சிகிச்சை பெற்ற மணி சமீபத்தில் வீடு திரும்பி இருந்தார்.  அந்த சமயத்தில், திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர், போண்டா மணிக்கு மருத்துவமனையில் உதவி செய்வது போல நடித்து அவரது ஏடிஎம்மில் பணம் எடுத்துவருவதாகச் சொல்லிச் சென்று பணத்தை அபகரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர்  போண்டாமணியின் நகை திருட்டு போனது. 

அத்துடன் மேலும் பலரது நகைகளை தமிழ்நாடு போலீஸார் மீட்டுக்கொடுத்துள்ளனர். இந்நிலையில் சுமார் 3.67 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டுள்ள ஆவடி குற்றப்பிரிவு எல்லைப்பகுதிக்குட்பட்ட பகுதியில் நகைகளை பறிகொடுத்த மக்களுக்கு, ஆவடி மாநகரக்காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தூர் முன்னிலையில் போலீஸார் அளித்தனர். அவ்வகையில் நடிகர் போண்டாமணியின் நகையையும் போலீஸார் மீட்டு அளித்தனர். அப்போது பேசிய நடிகர் போண்டாமணி, “திருடப்பட்டவர்களின் முகத்தில் முகமூடி இருந்தது. அதை வைத்தே அவர்களை பிடித்துவிட்டீர்களே!” என நகைகளை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றியையும் நெகிழ்ச்சியையும் போலீஸாரிடம் தெரிவித்து உணர்ச்சிப்பெருக்கில் ஆணையர் காலில் விழுந்தார்.

அப்போது, “இல்லை.. இல்லை சார் காலில் எல்லாம் விழாதீர்கள். இது எங்கள் கடமை” எனக்கூறிய ஆணையர், குறிப்பிட்ட போலீஸ் ஸ்டேஷனின் காவலர்களை நடிகர் போண்டாமணிக்கு அறிமுகப்படுத்தி அவர்கள்தான் அந்நகைகளை மீட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | Bakasuran : படங்களில் சாதிக்கருத்துக்கள் பேசுவது குறித்து செல்வராகவன் சொல்வது என்ன ? EXCLUSIVE

ACTOR BONDAMANI, TN POLICE, CHENNAI, CRIME

மற்ற செய்திகள்