வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதல் காரணமாக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் அவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை இன்று நேரில் சந்தித்த அவர், பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமன்றி பழனி மகன்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டண செலவை தாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள இருப்பதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்