கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் நன்கொடை...! - ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்தார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என பலர் கொரோனா நிவாரண பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் நன்கொடை...! - ஆன்லைன் மூலம் டிரான்ஸ்பர் செய்தார்...!

இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் குமார் ரூபாய் 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வங்கிப் பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி அனுப்பியுள்ளார் நடிகர் அஜித்குமார்.

ஏற்கனவே நடிகர் சிவக்குமார் அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நிவாரண தொகையாக ரூபாய் ஒரு கோடி அளித்தனர். மேலும் ஜிஆர்டி குழுமம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி, zoho கார்பொரேஷன் சார்பில் ரூ.5 கோடி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி, உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம் என பலரும் நிவாரண தொகையை அளித்தனர்.

மேலும் சமூக வலைதளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு பல இளைஞர்களும் தங்களால் ஆனா உதவியை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்