சிம் 'ஆக்டிவேட்' பண்றது எப்படிப்பா...? 'ஒரு லிங்க் அனுப்புறேன்...' 'அதுக்குள்ளே போய் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க...' 'பண்ணின உடனே வந்த ஒரு மெசேஜ்...' - நிலைகுலைந்து போன தாத்தா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து தருவதாக கூறி அரசு ஊழியர் ஒருவரை ஏமாற்றி ரூ. 86 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்எம்டிஏ காலணி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பாலன் (73). இவர் புதிய சிம் கார்டு ஒன்றைவாங்கியுள்ளார், அதை எப்படி ஆக்டிவேட் செய்து உபயோகிப்பது என தெரியாமல் இருந்துள்ளார்.
அப்போது போனில் அழைத்த ஒருவர் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ய உதவுவதாக தெரிவித்துள்ளார், நான் ஒரு லிங்க் அனுப்புறேன், அதில் பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலே போதும், ஆக்டிவேட் ஆகிவிடும் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பாலனும் அப்படியே செய்துள்ளார். இந்த நிலையில் போனில் ஒரு மெசேஜ் வந்துள்ளது, அதைக்கண்ட அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். அதாவது, அவரது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து 86,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதாகக் கூறி நம்ப வைத்து 86 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மற்ற செய்திகள்