Breaking: "நாளை தனியார் பள்ளிகள் விடுமுறைகள் அளித்தால் கடும் நடவடிக்கை".. தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாளை தனியார் பள்ளிகள் முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்திருக்கிறது.

Breaking: "நாளை தனியார் பள்ளிகள் விடுமுறைகள் அளித்தால் கடும் நடவடிக்கை".. தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அதிரடி..!

சோகம்

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி இன்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

Action taken if Private schools leave tomorrow says TN Matric

நடவடிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் நாளைமுதல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், CBSE பள்ளிகள்  இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை எடுத்திருக்கிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம். இந்த அறிவிப்பு பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன் அனுமதி பெறாமல், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அளித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

KALLAKURICHI, SCHOOL, PROTEST, கள்ளக்குறிச்சி, தனியார்பள்ளி, போராட்டம்

மற்ற செய்திகள்