AAVIN MILK PRICE HIKE: ஆவின் அரை லிட்டர் ஆரஞ்ச் பால் விலை 6 ரூபாய் உயர்வு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொழுப்பு நிறைந்த ஆவின் (ஆரஞ்சு) பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் உயத்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தமிழக அரசின் பால்வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது ஆவின் நிறுவனம். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை பெற்று அதனை சுத்திகரித்து விநியோகம் செய்து வருகிறது ஆவின். தமிழகம் முழுவதும் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இந்தப் பால் சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) மற்றும் டீமேட் (சிவப்பு) போன்ற வகைகளில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆவின் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல அரை லிட்டர் ஆவின் பால் ரூ.24 ல் இருந்து 30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை (நவ.5) முதல் அமலுக்கு வருகிறது. அதே நேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இன்றி லிட்டர் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்