'20 ஆயிரம் குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள்!' .. 'தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 10 லட்சம்!'.. 'நெகிழ வைத்த ஆச்சி மசாலா'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம் 1 கோடியே 10 லட்ச ரூபாய் நிதி அளித்துள்ளது.
சீனாவில் தொடங்கி இந்தியா முழுவதும் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகத்தில் அவ்வகையில், கொரோனா தடுப்புக்காக, சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வரின் அரசுக்கு நன்றி சொன்ன ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம் தமிழக அரசின் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், தமிழ்நாடு உணவு மற்றும் தானிய விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் 10 லட்ச ரூபாயும் நிதி வழங்கியுள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த கொரோனா சூழ்நிலையில், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 20 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண பொருட்களை தந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.