பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் அலங்கரிக்கப்பட்ட கோவில் தேரை கீழே தள்ளி அதனை தாங்கிப் பிடிக்கும் வினோத திருவிழா ஒன்று 100 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!

ஸ்ட்ரிக்ட்டா இருந்த ஆசிரியர்.. 30 வருஷம் கழிச்சு மாணவன் எடுத்த ரிவெஞ்ச்.. பதறிப்போன போலீஸ் அதிகாரிகள்..!

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது தப்பலாங்குழியூர் கிராமம். இங்குள்ள பிரசித்திபெற்ற பிடாரி கொழுத்தாளம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி 1 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தேர்த் திருவிழா என்றால் நாம் வழக்கமாக பார்ப்பதுபோல் அலங்கரிக்கப்பட்ட தேரை மக்கள் வடம் கொண்டு இழுப்பது அல்ல. இங்கே மனிதர்கள் தான் தேரை சுமந்து செல்கிறார்கள்.

A unique chariot festival celebrated over 100 years

10 கிராமங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தேரோட்டத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். கோவிலில் இருந்து கிளம்பும் தேரை கிராம மக்களே சுமந்து செல்வர். ஒரு கட்டத்தில் அவர்களால் தேரை தூக்க முடியாமல் போகும்போது அப்படியே அதை கீழே தள்ளி விடுவர். தேர் விழும் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அடுத்ததாக தேரை சுமக்க வேண்டும். இப்படி மூன்று நாள் தேரோட்டம் நடைபெற்ற பிறகு இறுதியாக கோவிலுக்கு அருகே ஒரு முறை தேர் கீழே தள்ளப்படும்.

கிடா வெட்டு

ஒவ்வொரு முறை தேர் கீழே விழும் போதும் அந்த இடத்தில் கிடா ஒன்றை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் இந்த கிராம மக்கள். தேர் இறுதியாக கீழே விழும் இடத்தில் தேரின் இரு பக்கத்திலும் கிராம மக்கள் திரள்வர்.

A unique chariot festival celebrated over 100 years

யார் பக்கம் தேரை கீழே விழ வைப்பது என போட்டியே நடக்கும். இறுதியாக தேர் கீழே விழுந்ததும் காப்பு அறுக்கப்பட்டு பிடாரி கொழுத்தாளம்மனின் உற்சவ மூர்த்தியை கோவிலுக்கு உள்ளே பக்தர்கள் எடுத்துச் செல்வர்.

100 ஆண்டுகள்

100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழாவில், 10 கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பது அப்பகுதியின் எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

இந்த தேர் திருவிழாவில் திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சுமார் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

"எனக்கு போர்புரிய-லாம் தெரியாது.. என்னால முடிஞ்சது இதுதான்".. இணையவாசிகளை உருக வைத்த இளம்பெண்..!

CHARIOT FESTIVAL, CELEBRATE, UNIQUE CHARIOT FESTIVAL, TAMILNADU, திருவாரூர்

மற்ற செய்திகள்