சென்னையில் முதன்முதலாக 'டெல்டா ப்ளஸ்' கொரோனா...! 'ஒருத்தருக்கு இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணியாச்சு...' - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஒருவருக்கு கொரோனா டெல்டா ப்ளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (23-06-2021) தெரிவித்துள்ளார்.
நாட்டில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரைநான்கு மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கொரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்றைய தினம் (22-06-2021) வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்