‘கிளம்பிய ரயிலில்’... ‘அவசரத்தில் ஏறமுயன்று’... ‘தவறி விழப் போன பயணி’... 'நொடியில் காப்பாற்றிய போலீஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரயிலில் அவசர, அவசரமாக ஏற முயன்று, பயணி ஒருவர், தவறி கீழே விழ இருந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரயில் மற்றும் பேருந்துகளில் பலரும், தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில், காலை 8.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அப்போது ஓடும் ரயிலில் அவசர, அவசரமாக ஏற முயன்ற பயணி ஒருவர், படிக்கட்டில் நிலை தடுமாறிக் கீழே விழப் பார்த்தார். இதையடுத்து, நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் ஜெயன் என்பவர், சாமர்த்தியமாக எதையும் யோசிக்காமல், சட்டென கீழே விழப்போன பயணியைக் காப்பாற்றினார்.
பின்னர் பாதுகாப்பாக ரயிலின் உள்ளே அவரை அனுப்பிவைத்தார். ரயில்வே காவலரின் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பயணியைக் காப்பாற்றிய ரயில்வே காவலர் ஜெயனுக்கு பாராட்டுகள் குவிந்தன. மேலும் அவருக்கு ரயில்வேத்துறை சார்பில் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.