"இந்த ஒரு பொய் சொன்னா"... "செம்ம அடி வாங்குவீங்க"... "ஆசிரமவாசி அலறல்"... "அப்டி என்ன பொய்யா இருக்கும்?"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தாம்பராம் அருகே உள்ள சதானந்தா மடத்தில், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகப் பொய் புகார் அளித்த ஆசிரம ஊழியரை பெண்கள் கடுமையாக அடித்து அலறவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இந்த ஒரு பொய் சொன்னா"... "செம்ம அடி வாங்குவீங்க"... "ஆசிரமவாசி அலறல்"... "அப்டி என்ன பொய்யா இருக்கும்?"...

தாம்பரம் அடுத்த சதானந்த புரத்தில் உள்ளது, சதானந்த சுவாமிகள் மடம். கடந்த சில தினங்களுக்கு முன், ஆசிரமத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவதாக, அச்சிறுவர்கள் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், அவை பொய்யான புகார்கள் என்று தெரியவந்துள்ளது.

26 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வந்த சசிகுமார் என்பவர் தான் அந்த வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுவர்கள் இடம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், மடத்தை நோட்டமிட வந்த சசிகுமாரைப் பார்த்ததும், மடத்தில் இருந்த பெண் பக்தர்கள் வெகுண்டெழுந்தனர். பொய்யான பாலியல் குற்றச்சாட்டை பரப்பியதற்காக அவரை வெளுத்து வாங்கியுள்ளனர்.

செல்போனை வைத்துக் கொண்டு, கேமரா மூலம் சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்புவோருக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

CHENNAI, ASHRAM, ALLEGATION