உங்க 'பேக்' செக் பண்ணனும்...! 'திறந்து பார்த்தப்போ அதிர்ந்து போன அதிகாரிகள்...' 'ஊருக்கு போற அவசரத்துல எடுத்து பேக்ல போட்டுட்டேன்...' - ஏதோ ஊறுகாய் பாட்டில் கொண்டு வந்தது மாதிரி இல்ல சொல்றாரு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாட்டு பயணிகள் மற்றும் அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் வேற்றுமாநிலத்தவர் சொந்த மாநிலங்களை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (28.04.2021) கோவையிலிருந்து டெல்லி செல்ல கோவை விமான நிலையம் சென்றுள்ளார் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த ஜோஹிந்தர் குமார். விமானநிலையத்தில் எப்போதும் போல அடையாள அட்டை, பயணச் சீட்டு சோதனை நடத்தப்பட்ட போது ஜோஹிந்தர் குமாரின் கைப்பையில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரிசோதனை செய்யும் அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவலும் அளித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த, பிளமேடு காவல் நிலைய காவல்துறையினர் விமான நிலையம் வந்து, ஜோஹிந்தர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜோஹிந்தர் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர் எனவும், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பணி அதிகாரியாக இருப்பதும் தெரியவந்தது.
அதோடு ஊருக்கு செல்லும் அவசரத்தில் கைப்பையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வைக்க மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில் அவரிடம் இருந்த துப்பாக்கியின் ஆவணங்களை சரிபார்த்த போது அனைத்தும் முறையாக இருந்துள்ளதாக பீளமேடு காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது அவரிடம் மேல் விசராணை நடத்திவருகின்றனர்.
மற்ற செய்திகள்