‘இப்படி ஒரு விறுவிறுப்பான கதையா?’ - படிக்கத் தூண்டும் ‘A Madras Mystery’ - கமல்ஹாசனால் வெளியிடப்பட்ட ‘புத்தகம்!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்த 2021 ஜனவரி 16-ஆம் தேதி,  அன்று A Madras Mystery (எ மெட்ராஸ் மிஸ்டரி) எனும் ஒரு புத்தகம் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான ‘பத்மஸ்ரீ’ கமல்ஹாசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதன் நூலாசிரியர்  R.ரங்கராஜன்.

‘இப்படி ஒரு விறுவிறுப்பான கதையா?’ - படிக்கத் தூண்டும் ‘A Madras Mystery’ - கமல்ஹாசனால் வெளியிடப்பட்ட ‘புத்தகம்!’

A Madras Mystery கதையின் தொடக்கத்தில் இரண்டு இளைஞர்கள் சென்னையில் ஒரு இடம் பற்றி ஒரு ரகசிய குறியீட்டை பரிமாறிக்கொண்டு தங்கள் ‘செயல்பாட்டை’ மேற்கொள்கின்றனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒருருபுறம் நாடே சாதிய சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இன்னொருபுறம் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதனிடையே  அமைச்சரவை பதவிகளுக்கு ஆளும் கட்சியினருக்குள்ளேயே அதிகாரப் போர் பரபரப்பாக மூண்டுவிடுகிறது. கதையின் மையக் கதாபாத்திரமான அஸ்வின் ஐ.பி.எஸ் கடத்தல் தொடர்பான விசாரணைகளைத் தொடங்குகிறார். ஆனால் அவருக்காக காத்திருக்கும் ஊகிக்க முடியாத திருப்பங்களால் திணறிப் போகிறார்.

இந்த கடத்தல்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சக்திகள் யார்? அவர்கள் வெறும் அரசியல் கணக்குகளுக்காக இவற்றை செய்கிறார்களா? அல்லது இவற்றுக்கு பின்னால் பெரிய சதித்திட்டங்கள் உள்ளதா? அஸ்வின் இதையெல்லாம் கண்டுபிடிப்பாரா? அவரது தோழியான அர்ச்சனா, இந்த சிக்கலான வழக்கை கண்டுபிடிக்க அஸ்வினுக்கு உதவுவாரா? என்பதே இந்த விறுவிறுப்பான A Madras Mystery-யின் கதை.

இந்த புத்தகத்தை எழுதிய நூலாசிரியர் திரு. R.ரங்கராஜன், தற்போது 42 வயதாகும் இவர், ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அடிப்படையில் ஒரு பட்டய கணக்காளர் (Chartered accountant) மற்றும் செலவு கணக்காளர் (Cost accountant). இவர் தற்போது சென்னை ‘அதிகாரிகள் ஐ.ஏ.எஸ் அகாடமியின் (Officers IAS Academy) அசோசியேட் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

அங்கு இவர் சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்கமளிக்கிறார். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கராஜன், தனது பட்டய கணக்கீடு பணிக்கு பிறகு ஒரு பெருநிறுவன வங்கியில் வங்கியாளராக உயர்ந்தார். பின்னர், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்த ரங்கராஜன் வடகிழக்கு மாநிலமான அசாமில் தனது பணியை சிறப்பாக ஆற்றி பங்களிப்பை தந்தார்.

இவரது பொழுதுபோக்குகளில் வாசிப்பு மற்றும் சிறுகதை எழுதுதல் ஆகியவை அடங்கும். தீவிர தூர ஓட்டப்பந்தய வீரரான இவர் இருபது அரை மராத்தான்களை வெற்றிகரமாக ஓடியுள்ளார். இவர் எழுதிய இந்த A Madras Mystery கதைப் புத்தகத்தைத் தான் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அமேசானில் 225 ரூபாய் விலைமதிப்பில் கிடைக்கும் இந்த புத்தகத்தை இ-புக் வாசிக்கும் பிரியம் உள்ளவர்கள் அமேசான் கிண்டிலில் 99 ரூபாய்க்கு வாசிக்கலாம்.

நூலாசிரியரை பின் தொடர:

Facebook: facebook.com/iasrangarajan

Twitter: https://twitter.com/rangarajan_ias

Instagram: https://www.instagram.com/rangarajanias

இந்த புத்தகத்தினை அமேசான் மற்றும் கிண்டில் செயலியில் பெறுவதற்கான லிங்க்: 

Order Print Book India

Amazon - http://amzn.to/3stRLPl

Odyssey - http://bit.ly/3bBcU42

Notion Press - https://bit.ly/39ulj6C

Flipkart - http://bit.ly/3oYO7Lf

eBooks

Amazon Kindle - https://amzn.to/35KcNzh

Order International Print Books

Amazon.com - http://amzn.to/2LPi7uj

Amazon.co.uk - https://amzn.to/3nKYhNZ

மற்ற செய்திகள்