'பாத்திரத்தை பக்கத்துல கொண்டு போனாலே போதும்...' 'ஒரு லிட்டர் பால் ரெடி...' ஆச்சரியம் பொங்க வைக்கும் பசுமாடு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூரில் உள்ள ஒரு பசு மாடு எதுவுமே செய்யாமல் தானாகவே பால் கறக்கும் அதிசயச் செயலை செய்து வருகிறது.

'பாத்திரத்தை பக்கத்துல கொண்டு போனாலே போதும்...' 'ஒரு லிட்டர் பால் ரெடி...' ஆச்சரியம் பொங்க வைக்கும் பசுமாடு...!

கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் வீட்டில் சில பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு ஒரு பசு கன்று ஈன்றுள்ளது. அன்று முதல் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்தப் பசுவின் மடியின் அருகில் பாத்திரத்தை வைத்தால்போதும் தானாகவே ஒரு லிட்டர் வரை பால் கறந்துவிடுகிறது. இந்தப் பசுவின் அதிசயச் செயலைக் கண்டு அக்கம் பக்கத்தினர் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தப் பசுவின் ஒரு காம்பில் குட்டி கன்று பால் குடித்துக் கொண்டிருந்தாலும் அதன் மற்றொரு காம்பில் பாத்திரத்தைக் காட்டினால் உடனே அதில் பால் சுரக்கிறது. இந்த அதிசயத்தை ஆச்சரியம் பொங்கப் பலரும் கண்டு வியந்து வருகின்றனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், ‘பால் சுரக்கும் காம்பு பலவீனமாக இருந்தால் அதன் துளை திறந்தபடியே இருக்கும். எனவே இப்படி நடக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள் இவ்வாறு கூறினாலும் மடியின் அருகே உள்ள பாத்திரத்தை எடுத்துவிட்டால் பசு கறப்பதைப் பசு நிறுத்திவிடுகிறது. பசு மடியில் சென்சார் எதுவும் உள்ளதா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மற்ற செய்திகள்