'வாடகை தரலன்னா வீட்டை காலி பண்ணுங்க...' ;தெருவில் குடியேறிய தம்பதி...; ஊர்மக்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் மாவட்டத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் தெருவில் குடியேறிய தம்பதிகளை பார்த்த ஊர்மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்து உரிய இடம் ஏற்படுத்தி கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கட்டிட தொழிலாளியான நாகராஜன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளோடு கரூர் அருகே உள்ள மூக்கனாங்குறிச்சி கிராமத்தில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் இழந்து தவிக்கும் நாகராஜ் குடும்பம் வாடகை தர இயலாமல் தவித்துள்ளனர். மேலும் அவரது வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீட்டு உரிமையாளர் வற்புறுத்தியதால், நாகராஜன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டு பொருட்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஆனால் தங்குவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தினால் வெள்ளியணை செல்லும் சாலை ஓரத்தில் தங்கினார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, நாகராஜ் படும் அவதியைப் பற்றி காவல்துறை தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் சாலையோரத்தில் தங்கியிருந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பின் நாகராஜையும், அவரது குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, தெருவில் இருந்த பொருட்களை எல்லாம் சிறிய லாரியில் ஏற்றி, நாகராஜ் வாடகை இருந்த பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்பு போலீசார் வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர்.