‘வீட்டுக்குள் விளையாடிய குழந்தை’... ‘காணாமல் போனதால் பதறிய குடும்பம்’... 'கடைசியில் நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடியில் காருக்குள் விளையாடிய 2 வயது குழந்தை, மூடிய கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘வீட்டுக்குள் விளையாடிய குழந்தை’... ‘காணாமல் போனதால் பதறிய குடும்பம்’... 'கடைசியில் நேர்ந்த சோகம்’!

தூத்துக்குடி புது கிராமத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவர் சென்னையில் வேலை பார்த்துவந்தநிலையில், கடந்த 14-ந் தேதி குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இவருடைய 2 வயது மகள் ரியானா சம்தா, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தை காணாமல் போனதால், வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

பின்னர், காருக்குள் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட அவர்கள், உடனடியாக கார் கதவை திறந்து குழந்தையை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. எனினும், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குழந்தை விளையாடிய போது, கார் கதவு திறந்து இருந்ததும், காருக்குள் ஏறிய குழந்தை, கதவை மூடி விளையாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது. அதன்பிறகு கதவை திறக்க தெரியாததால், குழந்தை மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CHILD, THOOTHUKUDI, CAR, SUFFOCATE